Press "Enter" to skip to content

பூட்டான் எல்லைக்குள் சட்டவிரோதமாக கிராமங்களை உருவாக்கும் சீனா

டோக்லோம் பள்ளத்தாக்கில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமானப் பணிகளை சீனா மேற்கொண்டு வருவது குறித்த செயற்கைக்கோள் படங்கள், புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டோக்லாம்:

இந்தியாவில் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர்.  இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது. 

இதை தணிக்கும் நடவடிக்கையாக சீனப்பகுதியில் உள்ள  சுசுல்-மோல்டோ எல்லையில் இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்து செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.  இதன் மூலம் ஒரு முழு அளவிலான கிராமத்தை அது உருவாக்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை

கண்டறிந்ததாக இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர்  டேமியன் சைமன் தெரிவித்துள்ளார். 

சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே உள்ள  சர்ச்சைக்குரிய பகுதியில் நடந்து வரும் இந்த கட்டுமானப்பணிகள் மேம்பாட்டு நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »