Press "Enter" to skip to content

3 அல்லது 4 தொகுதிதான் கிடைக்கும்… பாஜக கூறியதன் அர்த்தம் இதுதான்- அகிலேஷ் யாதவின் புது கணக்கு

சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் முக்கிய தலைவர்கள் சமாஜவாடி கட்சிக்கு வந்த பிறகு, பாஜக இந்த 20 சதவீதத்தை கூட இழக்கும் என அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க.வில் இருந்து அதிருப்தி தலைவர்கள் அடுத்தடுத்து விலகுவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் அவரைத் தொடர்ந்து மேலும் 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

உத்தரபிரதேச தேர்தலில் 20 சதவீத மக்கள் மட்டுமே பாஜகவை ஆதரிப்பார்கள், மீதமுள்ள 80 சதவீதம் பேர் சமாஜ்வாடி கட்சியை ஆதரிப்பார்கள்.

உத்தர பிரதேசத்தில் 80 சதவீத ஆதரவாளர்கள் ஒருபுறமும், 20 சதவீத ஆதரவாளர்கள் மறுபுறமும் இருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார். ஆனால், சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் முக்கிய தலைவர்கள் சமாஜவாடி கட்சிக்கு வந்த பிறகு, பாஜக இந்த 20 சதவீதத்தை கூட இழக்கும். 

இதேபோல், 403 தொகுதிகள் கொண்ட உ.பி. சட்டசபையில் பாஜக நான்கில் மூன்று பங்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக கூறுகிறது. வெறும் மூன்று அல்லது நான்கு தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பதே அதன் அர்த்தம். 

இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »