Press "Enter" to skip to content

இளையராஜாவுக்கு நன்றிக்கூறிய பிரதமர் மோடி

இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புது டெல்லி:

இசையமையாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தககம் ஒன்றிருக்கு எழுதிய அணிந்துரையில், “பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்” என பாராட்டி எழுதியிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா, தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்தபின் தான் அவ்வாறு எழுதியதாகவும், தனது கருத்தை திரும்பப்பெற பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

இளையராஜாவை தனிப்பட்ட முறையில் தொலைப்பேசியில் அழைத்து பேசிய பிரதமர் மோடி, தன்னை பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி என கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »