Press "Enter" to skip to content

அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு- ஆய்வு அறிக்கையில் தகவல்

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்:

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஏஏபி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் சார்பில் ஆய்வு அறிக்கை வெளியானது. 

அதில் தொற்று பரவல் தொடங்கியது முதல் இதுவரை 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  

அமெரிக்காவில் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 1,49,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. 

அமெரிக்காவில் வாக்கு மொத்த கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் 19 சதவீதம் பேர்  குழந்தைகள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்ததை விட 60 சதவீதம் அதிகமாகும்.

புதிய மாறுபாடுகள் மற்றும் சாத்தியமான நீண்ட கால விளைவுகளுடன் தொடர்புடைய நோயின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கு அதிக வயது சார்ந்த தரவுகளை சேகரிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகவும், ஏஏபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கொரோனா தொற்று உடனடி விளைவுகள் ஏற்படுத்துவதை அங்கீகரிப்பது முக்கியம் என்றும் முக்கியமாக இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மனம் மற்றும் சமூக நல்வாழ்வில் நீண்டகால தாக்கங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »