Press "Enter" to skip to content

வரும் காலத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் ட்ரோன் விமானிடுகள் தேவை- மத்திய மந்திரி தகவல்

ட்ரோன் சேவைகளுக்கான உள்நாட்டு தேவையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் ட்ரோன் (ஆளில்லா விமானம்) துறையை மூன்று திட்டத்தின் கீழ் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். முதல் திட்டம் கொள்கை சார்ந்தது. கொள்கையை எவ்வளவு வேகமாக செயல்படுத்துகிறோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

இரண்டாவது திட்டம் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை உருவாக்குவது. மூன்றாவது திட்டம் ட்ரோன் துறையில் உள்நாட்டு தேவையை உருவாக்குது. மத்திய அரசின் 12 அமைச்சகங்கள் இதை செயல்படுத்த உள்ளன.  

ட்ரோன் விமானி ஆக பணிபுரிய கல்லூரி பட்டப்படிப்பு தேவையில்லை, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், ட்ரோன் விமானி பயிற்சி பெறலாம். 2-3 மாத பயிற்சி பெறும் நபர் ட்ரோன் விமானியாக வேலை செய்யலாம். இதற்கு மாதம் ரூ.30,000 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். 

வரும் ஆண்டுகளில் எங்களுக்கு ஒரு லட்சம் ட்ரோன் விமானிடுகள் தேவை. எனவே இது மிகப் பெரிய வாய்ப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »