Press "Enter" to skip to content

புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது எளிதானதல்ல – பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெற்றி பெற்றுள்ள படம், ‘லவ் டுடே’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சத்யராஜ், இவானா, ராதிகா, ரவீனா ரவி, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்தனர். தினேஷ் புரோஷத்தமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர்சதீஷ், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.

இயக்குநரும் நடிகருமான பிரதீப்ரங்கநாதன் பேசியதாவது: அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த நிகழ்ச்சி. ஒரு புதுமுகத்தைஅறிமுகப்படுத்துவது எளிதானதல்ல.அதில் நம்பிக்கை, முதலீடு எல்லாமேபெரியது. அதை ஏஜிஎஸ் நிறுவனம்செய்ததை மறக்கமாட்டேன். இந்தப்படம் உலகம் முழுவதும் ரூ.100கோடியை தாண்டியுள்ளது. இது ரசிகர்களால்தான் சாத்தியமானது. இந்தப் படம் பண்ணும்போது, என் நண்பர்கள், ‘லவ் டுடே பெரிய மலை மாதிரி.ஏறுவது கஷ்டம். கோமாளி ஹிட்கொடுத்தபிறகு, கதாநாயகனாக நடிக்கிறேன் என்று மொக்கை வாங்கிவிட்டால், மீண்டும் எழுந்துகொள்வதுகஷ்டம்’ என்றார்கள். எனக்கும் அதுதெரிந்தது. மலை ஏறுவது கஷ்டம்தான்.

ஆனால், மலை ஏற என்ன வேண்டும் என்பதைத் தாண்டி, முதலில் மலை வேண்டும். ‘லவ் டுடே’தான் அந்தமலை. பரங்கிமலை மாதிரி என்றால்ஏறிவிடலாம். எவரெஸ்ட் ஏறுவதுதான் கஷ்டம். நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தால் பெரிய மலையில் ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »