Press "Enter" to skip to content

பல கெட்டப்களில் பிரபுதேவா: மார்ச் 3-ல் திரையரங்குகளில் ‘பஹிரா’ வெளியீடு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘பஹிரா’ திரைப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மை டீயர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ படங்களைத்தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹிரா’. இந்தப் படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஏஏஏ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் பிரபு தேவா 10-க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி என 6 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறி பல கொலை செய்யும் கொலைக்காரன் என சைக்கோ சிலிர்ப்பூட்டும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »