Press "Enter" to skip to content

“பிபிசியில் கூடத்தான் ஏதேதோ நடக்கிறது” – மிகுதியாகப் பகிரப்படும் ரன்பீர் கபூர் பேச்சு

‘பாலிவுட் மோசமான கட்டத்தை சந்தித்து வருகிறதே?’ என பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘‘பிபிசி நிறுவனத்தில் கூட ஏதேதோ நடக்கிறதே, அதைப்பற்றி முதலில் கூறுங்கள்” என நடிகர் ரன்பீர் கபூர் பேசியுள்ள காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘தூ ஜூதி மெயின் மக்கார்’ (Tu Jhoothi Main Makkaar) படம் மார்ச் மாதம் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரிடம், ‘பாலிவுட் மோசமான கட்டத்தை சந்தித்து வருகிறதே?’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரன்பீர், “என்ன பேசுகிறீர்கள்? ‘பதான்’ படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை நீங்கள் அறிவீர்களா? இல்லையா?’ என கூறினார்.

தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளரின் கேள்வியை குறுக்கிட்டு, ‘முதலில் நீங்கள் எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர்?’ என கேட்டார். அதற்கு அவர், ‘பிபிசி’ என கூறியதும், “உங்கள் நிறுவனத்திலும் ஏதேதோ நடக்கிறதே அதைப்பற்றி முதலில் கூறுங்கள்” என்றார். பொதுவாக எந்த சர்ச்சை கருத்துகளையும் தெரிவிக்காத ரன்பீர் கபூரின் இந்த கருத்து அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காணொளி ட்விட்டரில் போக்காகி வருகிறது.

இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு பேட்டி ஒன்றில், “பாகிஸ்தானிய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். கலைஞர்களுக்கு எல்லைகள் இல்லை என நினைக்கிறேன்” என ரன்வீர் பேசியிருந்தார். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நீங்கள் சார்ந்திருக்கும் கலைக்கு மரியாதை செலுத்த வேண்டும். ஆனால், அதே சமயம் உங்கள் நாட்டை விட கலை பெரிதல்ல. உங்கள் நாட்டுடன் மற்றொரு நாடு சுமூக உறவில் இல்லாதபோது உங்கள் நாட்டுக்குத்தான் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »