Press "Enter" to skip to content

கடைசிப்படத்தை இயக்குகிறார் குவென்டின் டாரன்டினோ

ஹாலிவுட் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் குவென்டின் டாரன்டினோ (Quentin Tarantino). இவர் இயக்கிய ‘பல்ப் பிக்‌ஷன்’, ‘கில் பில் 1’ மற்றும் 2, கிரிண்ட் ஹவுஸ் : டெத் ப்ரூப்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ உட்பட பல படங்கள் பெரும் புகழ் பெற்றவை. நான் லீனியர் திரைக்கதை, ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் , டார்க் நகைச்சுவை அம்சங்களை தன் படங்களில் அதிகம் பயன்படுத்தும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இவருடைய கடைசிப் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 1970-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்த பாலின் கேல் என்ற திரைப்பட விமர்சகர் மற்றும் நாவலாசிரியையின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘தி மூவி கிரிட்டிக்’ என்ற படத்தை டாரன்டினோ உருவாக்குகிறார். இதுவரை 9 திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், தன் வாழ்நாளில் 10 படங்கள் மட்டுமே இயக்க வேண்டும், 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால் இது அவர் கடைசிப் படமாக இருக்கும் என்கிறார்கள். வரும் 27ம் தேதி அவருக்கு 60 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »