Press "Enter" to skip to content

சோயிக் அக்தர் கருத்துக்கு கபில்தேவ் கூறிய பதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது: ஷாகித் அப்ரிடி

இந்தியா – பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்று சோயிப் அக்தர் கூறிய ஆலோசனைக்கு கபில்தேவ் தெரிவித்த பதில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருப்பதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஒரு பக்கம் அச்சுறுத்த மறுமக்கள் பொருளாதாரம் அச்சுறுத்தி வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்தி கொரோனாவை ஒழிப்பதற்கு நிதி திரட்டலாம் என்று சோயிப் அக்தர் தெரிவித்திருந்தார்.

அதற்கு கபில்தேவ் ‘‘இந்த நேரத்தில் இந்தியாவுக்கு பணம் தேவையில்லை. போதுமான அளவிற்கு பணம் இருக்கிறது. கிரிக்கெட் போட்டிக்காக உயிரை பணயம் வைப்பது தகுதியானது அல்ல’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கபில்தேவின் கருத்து ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது என்று அதிரடி பேட்ஸ்மேன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுவான எதிரியை தோற்கடிக்க வேண்டும். இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்கள் அதற்கு உதவாது.

சோயிப் அக்தர் கூறியதில் தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஆனால் கபில்தேவின் பதில் ஆச்சர்யமாக இருந்தது. அவரிடம் இருந்து சிறந்த பதில் வரு் என்று எதிர்பார்த்தேன். இந்த இக்கட்டான நிலையில் யாரும் இதுபோன்ற பேசமாட்டார்கள்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »