Press "Enter" to skip to content

கொரோனா தடுப்புக்கு நிதி திரட்ட கேம்ப் நௌ பெயரை விற்கும் பார்சிலோனா

ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து அணியான பார்சிலோனா, கொரோனா தடுப்புக்கு நிதி திரட்ட தனது மைதானத்தின் பெயரை விற்க முடிவு செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்த லீக் லா லிகா. இந்த லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று பார்சிலோனா. இந்த அணியில்தான் உலகின் தலைசிறந்த வீரரான மெஸ்சி விளையாடி வருகிறார்.

கேட்டலானில் பார்சிலோனாவுக்கு சொந்தமான கேம்ப் நௌ மைதானம் உள்ளது. இந்த மைதானம் 1957-ல் கட்டப்பட்டது. அந்த நாளில் இருந்து தற்போது வரை டைட்டில் ஸ்பான்சருக்கு விட்டதில்லை. கேம்ப் நவ் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயின் அதிக அளவில் பாதித்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்புக்கு நிதி திரட்டுவதற்காக கேம்ப் நௌ பெயரை ஸ்பான்சருக்கு விற்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு கேம்ப் நொள என்பதற்கு பதிலாக தங்களது நிறுவனங்களின் பெயரை ஸ்பன்சர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

‘‘டைட்டில் உரிமம் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும்’’ என பார்சிலோனா கிளப்பின் தலைமை நிர்வாகி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 99 ஆயிரம் ரசிகர்கள் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பது குறிப்படத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »