Press "Enter" to skip to content

மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரர்கள் இல்லை: ஜோஸ் மவுரினோ சொல்கிறார்

கால்பந்தில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலைசிறந்த வீரர்கள் இல்லை, பிரேசில் ரொனால்டோதான் சிறந்த வீரர் என மவுரினோ தெரிவித்துள்ளார்.

கால்பந்து விளையாட்டில் இந்தத் தலைமுறையின் தலைசிறந்த வீரராக மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோருக்கு இடையில்தான் நேரடி போட்டி.

கால்பந்தின் உயரிய விருதான பலோன் டி’ஆர்-யை அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சி ஆறு முறை வென்றுள்ளார். போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

ஆனால் கால்பந்து போட்டியின் தலைசிறந்த தலைமை பயிற்சியாளராக இருக்கும் போர்ச்சுக்கல்லின் ஜோஸ் மவுரினோ பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோதான் எல்லாக் காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோஸ் மவுரினோ கூறுகையில் ‘‘கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து டாப் இடங்களில் இடம்பிடித்து வருகின்றனர். எனினும், நாம் கண்டிப்பாக திறமை மற்றும் திறன் ஆகியவற்றை கட்டாயம் பேச வேண்டும். இந்த விஷயத்தில் பிரேசில் ரொனால்டோவை யாராலும் வீழ்த்த முடியாது.

ரொனால்டோ பாபி ராப்சன் உடன் சேர்ந்து விளையாடும்போது, மைதானத்தில் நான் பார்த்திலேயே அவர்தான் சிறந்த வீரர். காயம் அவரது கேரியரை கொன்று விட்டது. இல்லையெனில் வியக்கத்தக்க சாதனைகளை படைத்திருப்பார். ஆனால், 19 வயதான ரொனால்டோவின் திறமை நம்பமுடியாத வகையில் இருந்தது’’ என்றார்.

ரொனால்டோ விளையாடிய காலத்தில் பிரேசில் 1994 மற்றும் 2002-ல் உலக கோப்பையை வென்றது. 1998-ல் 2-வது இடத்தை பிடித்தது. அதேபோல் கோபா அமெரிக்கா கோப்பையை 1997 மற்றும் 1999-ல் பிரேசில் வென்றது. 1994-ல் அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது பிரேசில் வெண்கல பதக்கம் வென்றது.

ஜோஸ் மவுரினோ

மேலும் பார்சிலோனா, இண்டர் மிலன், ரியல் மாட்ரிட் அணிகளுக்காக விளையாடிய போது ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். 1997 மற்றும் 2002-ல் பலோன் டி’ஆர் விருதை வென்றுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »