Press "Enter" to skip to content

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: ஆர்சிபி முதல் இடம், சிஎஸ்கே-வுக்கு 3-வது இடம்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த போட்டிகள் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2021 பருவம் கிரிக்கெட்டில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 13 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 4-ல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ், பங்சாப் கிங்ஸ் அணிகள் 3-ல் தலா ஒரு வெற்றியுடன் முறையே 5 முதல் 7 இடங்களை பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

SRH

ரெட் ரன்ரேட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் +1.194 பெற்று முன்னணியில் உள்ளது. ஆர்சிபி +0.750 பெற்று 2-வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் +0.426 பெற்று 3-வது இடத்திலும் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »