Press "Enter" to skip to content

டு பிளிஸ்சிஸ், ருத்துராஜ் கெய்க்வாட் அபாரம்: கொல்கத்தாவுக்கு 221 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே

டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 95 ரன்களும், ருத்துராத் கெய்க்வாட் 42 பந்தில் 64 ரன்களும் விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்துள்ளது.

மும்பை:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ருத்துராஜ் இந்த போட்டியில் கொல்கத்தா பந்து வீச்சை துவம்சம் செய்தார். பவர்- பிளேயில் மட்டையிலக்கு இழப்பின்றி 54 ஓட்டங்கள் அடித்தது.

ருத்துராஜ் கெய்க்வாட் 33 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். சென்னை அணி 11.2 சுற்றில் 100 ஓட்டத்தில்த் தொட்டது. டு பிளிஸ்சிஸ் 35 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். சென்னை அணி 15.1 சுற்றில் 150 ஓட்டத்தில்த் தொட்டது.

ருத்துராஜ் 42 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 12 பந்தில் 25 ரன்களும், டோனி 8 பந்தில் 17 ரன்களும் விளாசினர்.

டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 95 ஓட்டங்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »