Press "Enter" to skip to content

கிறிஸ் கெய்லுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்தால், தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- கம்பிர்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இருந்தும், அந்த அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். முதல் பேட்டியில் 40 ஓட்டங்கள் விளாசிய அவர், அதன்பின் 10,11,15 என சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளார்.

கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடுவதால், கிறிஸ் கெய்ல் 3-வது வீரராக களம் இறக்கப்படுகிறார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் சரியாக விளையாடாததால், தாவித் மலானை கிறிஸ் கெய்லுக்குப்பதில் களம் இறக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் ஆடும் லெவன் அணியில் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைத்தால். அவரை தொடக்க வீரராகத்தான் களம் இறக்க வேண்டும் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘கெய்லையும், தாவித் மலானையும் ஒப்பிடுவது சரியானது அல்ல. ஒப்பீடு தேவை என நான் நினைக்கவில்லை. கிறிஸ் கெய்ல் டி20-யில் தாவித் மலானுடன் ஒப்பிடுகிறார்கள். மலான் நம்பர் ஒன் வீரராக இருக்கலாம். ஆனால் கண்டிசனை பார்க்க வேண்டும். சென்னையில் 3-வது வீரராக களம்இறக்கப்பட்டால், அவர் திணறுவார். கிறிஸ் கெய்லை போட்டிக்குக்குப் பிறகு போட்டியில், சீசனுக்குப் பிறகு பருவத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்கப்பட்டால், அவரை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்.

மும்பை ஆடுகளத்தில் அவரை தொடக்க வீரராக களம் இறக்கியிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் 60 பந்துகள் சந்தித்தால், கட்டாயம் சதம் விளாசியிருப்பார். சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆறு ஓவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கெய்லை விட சிறந்தவர் யார்?.’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »