Press "Enter" to skip to content

41 பந்தில் 47 ஓட்டத்தை அடித்ததன் மூலம் திருப்தியடையவில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்

காயம் காரணமாக உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவி ஆகியவை ஷ்ரேயாஸ் அய்யருக்கு கை நழுவி போனது.

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வாங்குதல் பேட்ஸ்மேனாக களம் இறங்கியவர் ஷ்ரேயாஸ் அய்யர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல். முதல் பகுதியில் விளையாட முடியாமல் போனது. ஆகவே ரிஷாப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியதால் ஷ்ரேயாஸ் அய்யருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை.

அதேபோல் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் இடம் கிடைக்கவில்லை. மாற்று வீரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு தற்போது களம் இறங்கியுள்ளார். நேற்று ஐதராபாத் அணிக்கெதிராக சிறப்பாக விளையாடி 41 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்றைய போட்டியில் விளையாடியது குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரைக்கும் மிகவும் சிறந்ததாக உணர்கிறேன். நான் திப்தியடைந்தேன் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால், இன்னும் ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஆகவே, நான் திருப்தியடையவில்லை.

என்னைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யவில்லை. கேப்டனாக இருந்த நேரத்தை ஒப்பிடும்போதுதற்போது நான் அதிக அளவு மட்டையாட்டம் மீது கவனம் செலுத்துகிறேன். நான் நெருக்கடியில் இருக்க விரும்புவேன். நெருக்கடியில் இருக்கும்போதுதான், சவால்கள் அதிகரிக்கும். கடினமான நேரத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை பெற முயற்சி செய்வேன்.

நான் இன்று களம் இறங்கும்போது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. ஆடுகளம் மட்டையாட்டம் செய்வதற்கு சீராக இல்லை. நான் போட்டியை முடித்துக் கொடுத்து அணியின் முக்கிய வீரராக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டோன்.

நான் விளையாடும்போதெல்லாம், கடைசி பந்து வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »