Press "Enter" to skip to content

கடைசி பந்து வரை திக் திக் திக்… கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது சி.எஸ்.கே.

ரெய்னா, டோனி, அம்பதி ராயுடு என மிடில் வாங்குதல் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி த்ரில் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  மட்டையாட்டம் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ஓட்டங்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 171 ஓட்டங்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

பின்னர் 172 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க் வாட், டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 40 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 30 பந்தில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தா்ர.

அடுத்து வந்த மொயீன் அலி 28 பந்தில் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

கடைசி 2 சுற்றில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பிரதித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் அடிக்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த சுற்றில் 22 ஓட்டங்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி சுற்றில் 4 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். 3-வது பந்தில் ஷர்துல் தாகூர் 3 ஓட்டத்தை அடித்தார். 5-வது பந்தில் ஜடேஜா அவுட் ஆனார். கடைசி பந்தில் தீபக் சாஹர் ஒரு ஓட்டத்தை அடிக்க சென்னை அணி வெற்றி பெற்றது,

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »