Press "Enter" to skip to content

வெங்கடேஷ் அய்யர் அரை சதம் – பஞ்சாப் வெற்றி பெற 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி 67 ஓட்டங்கள் எடுத்தார்.

துபாய்:

ஐ.பி.எல். தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 7 ஓட்டத்தில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராகுல் திரிபாதி வெங்கடேஷ் அய்யருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் ஓட்டத்தை வேகம் அதிகரித்தது.

குறிப்பாக, வெங்கடேஷ் அய்யர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இவர் 49 பந்தில் ஒரு சிக்சர், 9 பவுண்டரி உள்பட 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். திரிபாதி 34 ஓட்டத்தில் பெவிலியன் திரும்பினார்.  கேப்டன் மார்கன் 2 ஓட்டத்தில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 18 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 7 மட்டையிலக்குடுக்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 மட்டையிலக்கு, பிஷ்னோய் 2 மட்டையிலக்குடும், ஷமி ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »