Press "Enter" to skip to content

அறிமுக போட்டியில் சதம் அடித்த 16-வது இந்திய வீரர் – ஸ்ரேயாஸ் அய்யர் அசத்தல்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் சோதனை போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

கான்பூர்:

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் சோதனை போட்டி நேற்று தொடங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்து ஆடுகிறது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் ஸ்ரேயாஸ் அய்யர் 136 பந்துகளில் 75 ரன்களுடனும் ஜடேஜா 100 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தனர். 

2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா சவுத்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். அறிமுக தேர்வில் சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார்.

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் லாலா அமர்நாத் (1933) ஆவார். இந்தியாவுக்காக அறிமுக தேர்வில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆர்.எச்.ஷோதன், கிருபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரீந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவின் ஆம்ரே, சவுரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோஹித் சர்மா. பிரித்வி ஷா, ஆகியோர் அடங்குவர். 

ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன், 2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பிரித்வி ஷா சதம் அடித்தார். அவர் அறிமுக போட்டியிலேயே 134 ஓட்டங்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »