Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022 – புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது குஜராத் அணி

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் இதுவரை தான் ஆடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை:

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில்  குஜராத், சென்னை  அணிகள் மோதின. இந்த போட்டியில் 3 மட்டையிலக்கு வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது .

2-வது இடத்தில் லக்னோவும், 3-வது இடத்தில் பெங்களூருவும் ,4-வது இடத்தில் ஐதராபாத்தும் உள்ளது.

சென்னை அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »