Press "Enter" to skip to content

டி.என்.பி.எல்.கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 20 வீரர்கள் தக்க வைப்பு

கோவை கிங்ஸ் அணியில் டி.நடராஜன், ஷாருக்கான், சாய் சுதர்சன், அபிஷேக் தன்வார் உள்பட 17 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை:

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சேலம், நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், அருண், அருண்குமார், ஹரீஷ் குமார், என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியன், பிரசித் ஆகாஷ், ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், ஆர்.சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜயகுமார் ஆகிய 20 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் கோவை கிங்ஸ் அணியில் டி.நடராஜன், ஷாருக்கான், சாய் சுதர்சன், அபிஷேக் தன்வார் உள்பட 17 வீரர்களும், திருப்பூர் தமிழன் அணியில் தினேஷ் கார்த்திக், எம்.முகமது, ராஜ்குமார், எஸ்.அனிருதா உள்பட 15 வீரர்களும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஆர்.அஸ்வின், ஹரி நிஷாந்த், விவேக் உள்பட 17 பேரும், மதுரை பாந்தர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி, அருண் கார்த்திக், சிலம்பரசன் உள்பட 17 வீரர்களும், திருச்சி வாரியர்ஸ் அணியில் முரளிவிஜய், அந்தோணி தாஸ், ரஹில்ஷா, நிதிஷ் ராஜகோபால் உள்பட 15 வீரர்களும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் பாபா அபராஜித், பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன், ஷாஜகான் உள்பட 14 வீரர்களும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், பெரியசாமி, முருகன் அஸ்வின் உள்பட 15 பேரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் நெல்லை அணி செந்தில் நாதனை மதுரை பாந்தர்சுக்கு கொடுத்து அந்த அணியில் இருந்து எம்.ஷாஜகானை பரஸ்பரம் பரிமாற்றம் அடிப்படையில் பெற்றிருப்பதும், திருச்சி அணியில் இருந்து எஸ்.அனிருதாவை திருப்பூர் தமிழன் வாங்கியிருப்பதும் அடங்கும்.

அணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி மே 14-ந் தேதி நடக்கிறது. ஒதுக்கீடு பட்டியலில் இடம்பெற விரும்பும் புதிய வீரர்கள் www.tncacricket என்ற இணையதளத்தில் விண்ணப்பிங்களை பதிவிறக்கம் செய்து, அதை நிரப்பி நாளை முதல் 30-ந் தேதிக்குள் இ-மெயில் வாயிலாக சமர்பிக்க வேண்டும். இதே போல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »