Press "Enter" to skip to content

ஆடுகளம் திரும்புமாறு அழைப்பு – ரி‌ஷப்பண்டுக்கு பீட்டர்சன் கண்டனம்

ரிஷப் பண்டின் நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.

மும்பை:

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப்பண்ட் கடும் கோபத்துடன் காணப்பட்டார். ‘நோ பால்’ கொடுக்காததால் அவர் அதிருப்தி அடைந்து ஆடுகளத்தை விட்டு வீரர்களை வெளியே வருமாறு சைகை செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரி‌ஷப்பண்ட் நடந்து கொண்ட செயலுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ரி‌ஷப்பண்ட் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இது கிரிக்கெட், கால்பந்து அல்ல. நீங்கள் (ரி‌ஷப்பண்ட்) வீரர்களை அழைத்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது. உங்களால் அதை செய்ய முடியாது. பயிற்சியாளர் பாண்டிங் இருந்து இருந்தால் இப்படி நடந்து இருக்காது” என்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறும்போது, “ரி‌ஷப்பண்டின் விளையாட்டில் மோசமான செயலை ஏற்படுத்தி விட்டார். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு, இதனால் அவரது நடத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »