Press "Enter" to skip to content

நோபால் விவகாரம்- ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் உள்பட 3 பேருக்கு அபராதம்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நோபால் குறித்து எழுந்த சர்ச்சையில் சிக்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வான்கடே:

ஐபிஎல் கிரிக்கெட் போடியில் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 222 ஓட்டங்கள் குவித்தது. 

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 207 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

 இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் இறுதி சுற்றில் டெல்லி அணிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரை ராஜஸ்தான் அணியின் மெக்காய் வீசினார். இவர் முதல் 2 சுற்றில் மட்டும் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை பவல் சிக்சர் விளாசினார்.  3 -வது பந்து இடுப்புக்கு சற்று உயரமாக வந்ததாக வெளியில் இருந்த டெல்லி அணியினர் கூறினார். 

ஆனால் அதை களத்தில் இருந்த நடுவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த 2 வீரர்களையும் வெளியே வருமாறு கை சைகை காட்டினார். 

களத்தில் இருந்த நடுவரிடம் சென்று டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் முறையிட்டார். 

இதனையடுத்து முடிவுதொலைக்காட்சிநடுவரிடம் சென்றது. அதனைதொலைக்காட்சிஅம்பர் நோபால் இல்லை என அறிவித்தார். இதனையடுத்து டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருக்கு போட்டியில் இருந்து 50 சதவீதமும், உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ப்ரேவுக்கு 100 சதவீதம் அபராதமும் ஒரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »