Press "Enter" to skip to content

பெங்களூரு- ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை: 6-வது வெற்றி யாருக்கு?

டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

புனே:

15-வது ஐ.பி.எல். 20 சுற்றிப் போட்டியில் 32-வது நாளான இன்று இரவு 7.30 மணிக்கு புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 5-வது இடத்திலும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்திலும் உள்ளன. இதனால் 6-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் அணி கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, டெல்லி, லக்னோ ஆகியவற்றை வென்று இருந்தது. பஞ்சாப், சென்னை, ஐதராபாத்திடம் தோற்று இருந்தது. பெங்களூர் அணியில் கேப்டன் டுபெலிசிஸ், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஹசரங்கா, ஹர்‌ஷல் படேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி ஐதராபாத், மும்பை, லக்னோ, கொல்கத்தா, டெல்லி ஆகியவற்றை வென்று இருந்தது. பெங்களூர், குஜராத் அணிகளிடம் மட்டும் தோற்று இருந்தது.

ஏற்கனவே பெங்களூர் அணியிடம் 4 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தோற்றதற்கு ராஜஸ்தான் இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியில் ஜோஸ்பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், யசுவேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »