Press "Enter" to skip to content

கேப்டன் பதவியில் சாதனை படைத்த எம்எஸ் டோனி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி 8 பந்தில் 21 ஓட்டத்தை எடுத்தார். இதன் மூலம் 20 சுற்றிப் போட்டிகளில் கேப்டன் பதவியில் அவர் 6 ஆயிரம் ஓட்டத்தில் எடுத்து சாதனை புரிந்தார். விராட்கோலிக்கு அடுத்தபடியாக டோனி 6 ஆயிரம் ஓட்டத்தில் கேப்டன் பதவியில் எடுத்தார். விராட் கோலி கேப்டன் பதவியில் 6,451 ஓட்டத்தை எடுத்துள்ளார். ரோகித் சர்மா 4764 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார்.

மேலும் 20 சுற்றிப் போட்டிகளில் 200 கேட்ச் பிடித்த முதல் மட்டையிலக்கு கீப்பர் என்ற சாதனையையும் டோனி படைத்தார். ஷர்துல் தாகூரின் கேட்சை பிடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை தொட்டார். தினேஷ் கார்த்திக் 182 கேட்ச்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »