Press "Enter" to skip to content

காதலில் விழுந்த காஜல் அகர்வால்… பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி கதாநாயகன்க்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வால் காதலில் விழுந்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கமண்ட் போட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் காஜல் அகர்வால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ஹார்ட்டின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது, விரைவில் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »