Press "Enter" to skip to content

காடன் படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் காடன் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்கி திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

 இதில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.நாயகியாக ஜோயா நடித்துள்ளார். 3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

 ஏப்ரல் 2-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. தற்போது 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ‘காடன்’ திரைக்கு வரும் என்று பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »