Press "Enter" to skip to content

களத்தில் சந்திக்க தயாராகும் ஜீவா – அருள்நிதி

தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் களத்தில் சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் வெளியீடு ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இதில் மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, ரோபோசங்கர், பால சரவணன் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .

இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.

“களத்தில் சந்திப்போம்” படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது.

தற்போது களத்தில் சந்திப்போம் படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் ஆர்யா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »