Press "Enter" to skip to content

இவரெல்லாம் அம்மனா… நயன்தாராவை விளாசிய மீரா மிதுன்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்ததற்கு, இவர் எல்லாம் அம்மனா என்று மீரா மிதுன் கூறியிருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆர் ஜே பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து ஆடி குத்து என்ற பாடல் வெளியாக இருப்பதாகவும் அதற்கு தயாரா எனக்கு ஆர் ஜே பாலாஜி பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த மீரா மிதுன் திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்தவர் எல்லாம் அம்மன் வேடம் ஏற்று நடிக்கிறார். இந்த அசிங்கம் எல்லாம் கோலிவுட் திரைப்படத்தில் தான் நடக்கும். இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் வாய் திறக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »