Press "Enter" to skip to content

கே.ஜி.எஃப். நடிகர் யஷ்சுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பு

கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் யஷ்சுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பு அனுப்பியுள்ளது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், நடித்துள்ள .கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் விளம்பரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த விளம்பரத்தில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் யஷ்சுக்கு, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் விளம்பரம் கடந்த 7-ந் தேதி வெளியாகி உள்ளது. அந்த விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி மற்றும் விளம்பர ஒட்டிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புகைப்பிடிப்பது, புகையிலையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த விதி கே.ஜி.எப்.-2 விளம்பரத்தில் மீறப்பட்டுள்ளது. அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். நீங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளீர்கள். நீங்கள் செய்வதை அந்த ரசிகர்கள் பின்பற்றுவார்கள். புகைப்பிடிப்பதால் புற்றுநோய் ஏற்பட சாத்தியம் உள்ளது. சமூக அக்கறை கொண்ட நீங்கள், சமுதாய நலனுக்காக புகைப்பிடிக்கும் காட்சியை படத்தில் இருந்து நீக்கி சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »