Press "Enter" to skip to content

மனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் மருத்துவர் சாந்தா – சூர்யா இரங்கல்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான மருத்துவர் சாந்தா மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான மருத்துவர் சாந்தா (93 வயது) அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர்.

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சாந்தா, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவர் சாந்தாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சூர்யா டுவிட்டரில், “கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி. மனம் உருகும் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »