Press "Enter" to skip to content

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் உருவாகி வருகிறது. 

மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »