Press "Enter" to skip to content

‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ – வெளியீடு தேதி அறிவிப்பு

சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கி உள்ள ஏலே படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வா குவாட்டர் கட்டிங் மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஹலீதா ஷமீம். இவர் ‘பூவரசம் பீபீ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இவர் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஏலே’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.சசிகாந்துடன் இணைந்து புஷ்கர் காயத்ரியும் தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். நேற்று வெளியான இப்படத்தின் பட விளம்பரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »