Press "Enter" to skip to content

லவ் யூ தங்கமே…. மிகுதியாகப் பகிரப்படும் விக்னேஷ் சிவனின் காதலர் தின பதிவு

இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய நானும் கீழ் மகன் (ரவுடி) தான் படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், லவ் யூ தங்கமே என குறிப்பிட்டு காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் பட்டுவேட்டி சட்டையுடனும், நயன்தாரா பட்டுப்புடவை அணிந்தபடியும் ஜோடியாக பாவனை கொடுத்துள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »