Press "Enter" to skip to content

சுல்தான் படத்தின் புதிய அப்டேட்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட வரவு செலவுத் திட்டத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »