Press "Enter" to skip to content

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் இணைந்த கேஜிஎப் பிரபலம்

‘திரெளபதி’ படத்தின் மூலம் பிரபலமான மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. மோகன் ஜி இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. இயக்குனர் மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். 

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.ஜி.எப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா அவினாஷ், ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »