Press "Enter" to skip to content

அண்ணாத்த படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கபாலி நடிகர்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் தனது பிறந்தநாளைஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வருகிறார் விஸ்வாந்த். இவர் தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் நடித்து வந்த விஸ்வாந்த், ‘கபாலி’ படத்தில் பலரால் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »