Press "Enter" to skip to content

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் – பா.ரஞ்சித்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித், ரைட்டர் படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்டு இருக்கிறார்.

அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன.

இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘ரைட்டர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். மேலும் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் என்றும் சமூக வலைத்தளத்தில் பா.ரஞ்சித் பதிவு செய்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »