Press "Enter" to skip to content

‘ஜகமே தந்திரம்’ படத்திற்காக ரொமாண்டிக் பாடல் பாடிய தனுஷ்

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர் இசையில் ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக ‘நேத்து’ என்கிற ரொமாண்டிக் பாடலை வெளியிட உள்ளனர்.

ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட விளம்பர ஒட்டி

நாளை காலை 11 மணிக்கு இப்பாடல் வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளதோடு, பாடல் வரிகளையும் எழுதியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »