Press "Enter" to skip to content

முகம் எப்படி சரியானது – ரைசா விளக்கம்

சில நாட்களுக்கு முன் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரைசா, அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் முதல் பருவத்தில் பங்கேற்று பலருடைய கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.

இவர் கடந்த மாதம் சிகிச்சைக்கு தோல் மருத்துவரிடம் சென்றதாகவும் அதனால் தனது முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்தும் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல சர்ச்சைகள் நடந்தன. சில நாட்களுக்கு முன் மீண்டும் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ரைசா.

பலரும் இதுகுறித்து கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் அதற்கான பதிலை தெரிவித்துள்ளார் ரைசா. புதிய கிளினிக் ஒன்றிற்கு சென்றதாகவும் அங்கு எடுத்துக்கொண்ட ஐந்து வார சிகிச்சைக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »