Press "Enter" to skip to content

அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல – ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்

படத்தின் வரவு செலவுத் திட்டம், தான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

மைதான் படத்துக்காக ரூ.2 கோடி செலவில் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் ஒன்று சமீபத்தில் வீசிய டவ்தே புயலில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “மைதான் படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது. இந்தப் படத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே எனக்கு அழுகை தான் வருகிறது. 

போனி கபூர், புயலால் சேதமடைந்த மைதான் பட செட்டின் புகைப்படம்

படத்தின் வரவு செலவுத் திட்டம் நான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். அதிர்ஷ்டவசமாக அந்த செட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் புதிதாக செட் போட வேண்டும் என்றால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்” என போனிகபூர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »