Press "Enter" to skip to content

தாங்க முடியாத வேதனை… மிகவும் கஷ்டப்பட்டேன் – போதை வழக்கு குறித்து மனம்திறந்த ரகுல் பிரீத் சிங்

இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போது நிறைய அவதூறுகளை சந்தித்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக வந்த ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகன்க்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னைப்பற்றிய அவதூறுகளால் வேதனை அடைந்ததாக நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: “தெலுங்கில் படங்கள் குறையும்போது தமிழ், இந்தி, கன்னட படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதனால்தான் தொடர்ந்து திரைப்படத்தில் நீடிக்கிறேன். எந்த மொழியில் நல்ல கதைகள் கிடைக்கிறதோ அங்கு போய் விடுகிறேன். திரைப்படத்திற்கு மொழி பேதம் கிடையாது. 

ரகுல் பிரீத் சிங்

இந்தி திரையுலக போதை பொருள் வழக்கில் என்மீது குற்றச்சாட்டுகள் வந்தன. இதைவைத்து நிறைய பேர் என்னை தொடர்ந்து அவதூறு செய்தார்கள். தலையும் வாலும் இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் வந்த கிசுகிசுக்களால் எனக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். 

தாங்க முடியாத அளவு வேதனையும் இருந்தது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கொடுத்தும் அதை நிறுத்தவில்லை. அதனால் என் மீதான கிசுகிசுகளுக்கு விளக்கம் சொல்வதை நிறுத்தி விட்டேன். இப்போது எனக்கு எதிரான கிசுகிசுக்கள் குறைந்துள்ளன”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »