Press "Enter" to skip to content

ஹாஸ்பிட்டல்ல இடம் இல்லை… கொரோனா அனுபவங்களை பகிர்ந்த காளி வெங்கட்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகர் காளி வெங்கட், அது குறித்த அனுபவங்களை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் காளி வெங்கட் இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், இந்த காணொளியை வெளியிடலாமா வேண்டாமா என்று யோசித்தேன். இது ஒரு விழிப்புணர்வு காணொளி மாதிரி தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். 21 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.

இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தது. கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்ததால உடனே அட்மிட் ஆகனும்னு சொன்னாங்க. சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை. போன மாசம்தான் இது நடந்தது. நான் இதுல இருந்து வென்றே தீருவேன்னு என்றெல்லாம் நினைக்கல. வந்துருச்சு அடுத்த என்ன பண்ணலாம்ன்னு தான் இருந்தேன்.

மருத்துவர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அறிவுரை கேட்டு தான் நான் நடந்துகிட்டேன். கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க, வந்துடுச்சுன்னாலும் அலட்சியமா இருக்காதீங்க. தைரியமா இருங்க. முக்கியமா எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி, அவர் சொல்றத கேளுங்க என காணொளியில் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »