Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார் இயக்குனர் லிங்குசாமி

ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லிங்குசாமியின் ஆசிரமம் திறப்பு விழாவில் எடுத்த புகைப்படம்

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு இயக்குனர் லிங்குசாமி டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »