Press "Enter" to skip to content

மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் போட வேண்டும் – நடிகர் விஷால் ஆவேசம்

பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை திரைப்படத்திற்கு அழைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகைகள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலைகுனிய வைப்பது மட்டுமின்றி அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை.

இந்தக் குற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி எனது நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை சாதி பிரச்சினையாக்குவது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் போட வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் இது கடுமையான குற்றம் என்பது தெரியவரும். குறைந்தது இப்போதாவது மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். இதனை சாதி பிரச்சினையாக மாற்றாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »