Press "Enter" to skip to content

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு…. பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

மாணவர்களின் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என்று நடிகர் சூர்யா கூறி உள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மாணவர்களிடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது.
இந்நிலையில், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்துக்களை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் அனுப்பும்படி கூறி உள்ளார். 
ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும், மாணவர்களின் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் ஆபத்தானவை என்றும் சூர்யா கூறி உள்ளார்.

கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ள சூர்யா, இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »