Press "Enter" to skip to content

அழகிய புகைப்படத்துடன் குழந்தையின் பெயரை அறிவித்த மகத்

நடிகர் மகத் தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு, அதில் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் பருவம் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். இவர் பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

நடிகர் மகத் டுவிட்டரில் பகிர்ந்த புகைப்படங்கள்

கடந்த ஜூன் 7-ம் தேதி மகத் – பிராச்சி தம்பதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், தற்போது அந்த குழந்தைக்கு ‘அதியமான் ராகவேந்திரா’ என பெயர் சூட்டி உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள மகத், குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »