Press "Enter" to skip to content

சிவகார்த்திகேயன் படத்தின் ஓடிடி வெளியீடு தேதி முடிவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த சிவகார்த்திகேயனின் படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகன்க்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக திரைப்படத்தில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.  

இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார்.   

தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’. இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தை கடந்தாண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. 

வாழ் படத்தின் விளம்பர ஒட்டி

இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 16-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »