Press "Enter" to skip to content

‘கீழ் மகன் (ரவுடி) பேபி’ பாடலின் புதிய சாதனை

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற கீழ் மகன் (ரவுடி) பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதில் தனுஷ் எழுதி பாடி இருந்த ‘கீழ் மகன் (ரவுடி) பேபி’ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. 

இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘யூடியூப்’பில் வெளியிடப்பட்ட கீழ் மகன் (ரவுடி) பேபி பாடலின் காணொளி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த வண்ணம் உள்ளது.

தனுஷ், சாய் பல்லவி

இந்நிலையில், கீழ் மகன் (ரவுடி) பேபி பாடல் காணொளி யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் யூடியூபில் இதுவரை 118 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »