Press "Enter" to skip to content

ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ முடிவுக்கு வந்தது

தமிழில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தை இந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்குகின்றனர். இதில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். உதயகுமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரண்ட்ஷிப் படத்தின் விளம்பர ஒட்டி

தமிழில் உருவாகும் இப்படத்தை இந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இந்நிலையில், ஹர்பஜன் சிங் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் அவர் டப்பிங் பணிகளை தொடங்க உள்ளாராம். இப்படத்தின் பட விளம்பரம் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »